...
செய்திகள்

அனுராதபுரம்- மிகிந்தலை அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் 

மூத்தசிவன் எல்லாளன் ஆட்சி செய்த பெருநிலத்தில் 
நம்பிக்கை யொளியேற்றி அனைத்திடமும் வீற்றிருக்கும் 
ஆதிசிவன் திருமகனாம் கருணைமிகு பிள்ளையாரின் தாள் பணிந்து நலம் பெறுவோம் 
அனுராதபுர மாவட்டத்தின் குளக்கரைகள்தனிலும், பெருவீதி மருங்கினிலும்  மாவட்டம் முழுவதிலும் பரந்து நிலை கொண்டு அருளுகின்ற 
ஏழைப்பங்காளன் எங்கள் பிள்ளையாரின் தாள் பணிந்து அருள் பெறுவோம் 
நீதிநெறி தவறாத பெருமைமிகு மாமன்னன் எல்லாளன் ஆட்சி செய்த 
வளநிலத்தில் பிள்ளையார் சந்தியெனும் சீர்மைமிகு நல்லிடத்தில் கோயில் கொண்டுறையும் 
அருள் பொழியும் பிள்ளையாரின் தாள் பணிந்து வளம் பெறுவோம் 
மிகிந்தலைப் பிள்ளையாரென்ற பெயர் பூண்ட விநாயகனை 
என்றும் மனத்திருத்தி நம்பிவழிபட்டால் வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டி நின்றருளும்
வேழமுகப் பிள்ளையாரின் தாள் பணிந்து பலம் பெறுவோம் 
காணுமிடமெல்லாம் கண்கண்ட தெய்வமாய்த் தோன்றுகின்ற 
நாதனையென்றும் மறவாது மனங்கொள்வோம்
வருந்தடைகள் தடுத்து விட்டு, வந்த தடையகற்றிவிட்டு
நிம்மதியைத் தந்தருளும் பிள்ளையாரின் தாள் பணிந்து சுகம் பெறுவோம்
மதிதந்து வழிநடத்தும் வல்லவராய் திகழ்கின்ற 
கதிரவனின் ஒளிபோன்று கருணையொளி பரப்பிவிடும்
திருமாலின் மருமகனாம் தீங்ககற்றும் பெருந்தெய்வம் பிள்ளையாரின் 
தாள் பணிந்து நிம்மதியைத் தான்  பெற்றிடுவோம். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen