நிகழ்வுகள்மலையகம்

அனு அழகு மற்றும் தையல் கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

பண்டாரவளையில் அழகுக் கலை மற்றும் தையல் கலை பயிற்சியின் பின், பரீட்சைகளுக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது.

அனு தையல் கலை மற்றும் அழகு கலைகூட பொறுப்பதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் குறித்த நிகழ்வு பண்டாரவளை மலிந்தி விடுதியில் நடைபெற்றது.

இதன்போது பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அழகுக் கலை மற்றும் தையல் கலையில் மலையக மாணவர்களின் முறைசார் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வுக்கான ஊடக அனுசரணை மலையகம்.lk, மலையகம் FM இனால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com