அரசியல்செய்திகள்

அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கும் ஒரு அரசாங்கத்தை அமைப்போம் – அனுர

அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கும் ஒரு அரசாங்கத்தை நிறுவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களைப் பாதுகாக்கும் திறன் கொண்ட அரசாங்கமே நாட்டுக்கு தேவை என கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு புதிய நிர்வாகத்தையும் புதிய ஆட்சியாளரையும்  தேர்ந்தெடுக்க பொதுமக்கள் விரும்பினால், உங்களுக்கு ஒரே ஒரு தேர்வுதான். அது தேசிய மக்கள் சக்தியாகும்.

ஒரு நாட்டில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் மக்களைப்  பாதுகாக்கும் திறன் கொண்ட புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

மேலும் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து இரு தரப்பினரும் தற்போது பேசி வருகின்றனர். அந்த ஒப்பந்தம் மஹிந்த தரப்பினர் கூறுவதைப்போல தீங்கானது அல்ல என்றும் கூறினார்.

Related Articles

Back to top button
image download