உலகம்

அனைத்து வௌிநாட்டு படையினரும் வெளியேற வேண்டும்; ஈராக் நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றம் !

தமது நாட்டில் உள்ள அனைத்து வௌிநாட்டு படையினரும் வெளியேற வேண்டும் என்ற பிரேரணை ஈராக் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாத்தின் போது இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வௌ்ளிழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைமை அதிகாரி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியது.

இந்நிலையில் தற்போது ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download