செய்திகள்

அனைவரும் ஒன்றுபடுவதே இன்று நாட்டின் தேவையாகும்.

வறுமையை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இனம், மதம், சமயம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றுபடுவதே இன்று நாட்டின் தேவையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இதுவே முஹம்மத் நபியவர்களின் போதனையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

போரா சமூகத்தினரின் சர்வதேச மாநாட்டிற்கு தனது நல்லாசிகளை தெரிவித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

போரா சமூகத்தினரது சர்வதேச மாநாடு அண்மையில் பம்பலப்பிட்டியிலுள்ள போரா சமூகத்தின் பிரதான பள்ளியை மையப்படுத்தி ஆரம்பமானது.

இந்த மாநாடு 10 நாட்கள் நீடிக்கவுள்ளது. 
இந்த திட்டம் அனைத்து இனங்கள், சமயங்களுக்கு மத்தியில் சமாதானத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பி நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button