உலகம்சினிமா

அன்பால் அரவணைத்த தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு முகின் நெகிழ்ச்சி.

அன்பால் அரவணைத்த தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு என பிக் பொஸ் மூன்றில் வெற்றிபெற்ற முகின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பொஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதற்கான இறுதிப் போட்டி பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

இதில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

2 ஆம் இடத்தை சாண்டியும், 3 ஆம் இடத்தை லொஸ்லியாவும் பிடித்தனர்.

முகின் வெற்றி பெற்றதை அவரது நண்பர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றார்கள்.

அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் ரொம்ப நன்றி. மலேசியாவுக்கு ரொம்பவே நன்றி. ஏனென்றால் பாட்டுப் பாடி முயற்சி செய்து கொண்டிருந்தபோது உறுதுணையாக இருந்தார்கள். எந்தவொரு தருணத்திலும் அவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. பிக்பொஸ் வரும் வரைக்கும் ரொம்ப உறுதுணையாக இருந்தார்கள் என இதன்போது முகின் கூறினார்.

அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததால் மட்டுமே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். அன்பு ஒன்றும் அனாதையில்லை, அன்புக்கு நான் இருக்கேன்டா எனச் சொல்ல நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். என்னை அன்பால் அரவணைத்த தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு.

இது எனக்கு இப்போது இன்னொரு கிரீடம். வாழ்க்கையில் இனிமேல் தோற்கக் கூடாது என முடிவு பண்ணியிருக்கேன். அந்த முடிவை நீங்களும் எடுங்கள். எப்போதுமே வாழ்க்கையில் ஜெயிக்கலாம் எனவும் முகின் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download