செய்திகள்

அப்புத்தளை- ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் –

விநாயகனே வேலனுக்கு மூத்தோனே
உலகினையே ஆட்சிசெய்யும் உமையாள் மைந்தா
நிம்மதி நிறைந்த வாழ்வு நித்தம் நிலைத்துவிட
காத்து அருளளிப்பாய் கற்பக விநாயகனே

வேதனைகள் அண்டாத பெருவாழ்வைத் தந்திடய்யா
நோய்கள் நெருங்காத நிம்மதியும் வேண்டுமய்யா
வளமாக நமை அணைத்து வழிநடத்தி
காத்து அருளளிப்பாய் கற்பக விநாயகனே

அப்புத்தளை நன்னகரில் கோயில் கொண்ட திருமகனே
தளர்வில்லா தைரியத்தை எமக்களிக்க வேண்டுமய்யா
தலை தாழா வாழ்வுக்கு உறுதுணையாய் நீயிருந்து
காத்து அருளளிப்பாய் கற்பக விநாயகனே

மலைசூழ்ந்த திருவிடத்தில் குடியிருக்கும் பிள்ளையாரே
துணிவுடன் நாம் வாழ்ந்திடவே துணையிருப்பாய் நீயப்பா
வேதனைகள் சுமந்து நிற்கும் எங்கள் நிலைமாறிடவே
காத்து அருளளிப்பாய் கற்பக விநாயகனே

நாட்டினிலே நலங்கள் பெருகிடவும்
நல்லவர்கள் தலைநிமிர்ந்து நலமாக வாழ்ந்திடவும்
அல்லல், பகை, கொடுமை அடியோடு அகன்றிடவும்
காத்து அருளளிப்பாய் கற்பக விநாயகனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button