செய்திகள்

அம்பாறை − திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு; 3 பொலீஸார் பலி!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிசூட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (24-12-2021) இரவு நடைபெற்றுள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Back to top button