...
செய்திகள்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 22 வது சிரார்த்த தினநிகழ்வு

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 22 வது சிரார்த்த தினம் இன்று
அனுஸ்டிக்கப்பட்டது.

பழைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இ.தொ.காவின்
பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மலர் மாலை
அணிவிப்பதையும் ,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மலர் கொத்து
வைப்பதையும் அதேபோல நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி
ராமேஸ்வரன் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர்
சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

மேலும் கொழும்பு சௌமிய பவனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம்
தொண்டமான் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்தனர்.

இதேவேளை 22வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மலையக கலாச்சார ஒன்றியத்தின்
மாணவபிரிவின் மாணவர்களுக்கு கா.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று
உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு மலையக கலாச்சார ஒன்றியமும் CCEM
கல்வி நிறுவனமும் இணைந்து பதக்கங்களும் சான்றிதழ்களளும் அமைச்சரினால்
மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக கலாச்சார
ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen