உலகம்

அமெரிக்காவின் திடீர் செயல் ஈரானுக்கு பாரிய நட்டம்.

எரிப்பொருள் தாங்கிகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட வலைகுடா நாடுகளின் கடல் பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களை அடையாளம் காணும் வகையில் ஈரானினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த முக்கிய தரவுகள் அழிவடைந்துள்ளன.

ஈரானிய ஊடகங்களை மேற்கொள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது .

அமெரிக்காவால் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாகவே இந்த முக்கிய தரவுகள் அழிந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 20ஆம் திகதி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஈரானின் முக்கிய தரவுகள் அடங்கிய களஞ்சித்தை இலக்கு வைத்தே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த சைபர் தாக்குதலினால் அழிவடைந்த தரவுகளை மீள பெறும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
 அமெரிக்காவின் பிரபல நாளிதலொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த சைபர் தாக்குதலினால் ஈரானின் இராணுவ தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button