அரசியல்

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் நெருங்கிய தொடர்புடையதாக்குதல், சாதாரணமானதும் அமைதியானதுமான சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் கூட்டுப் பொறுப்பு என்ற தொனிப்பொருளில் குறித்த கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளது.

நிவ்யோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படவுள்ளது. அதன் முக்கிய கூட்டத் தொடர் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்றைய தினம் மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

மேலும், இந்த கூட்டத் தொடரில், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com