விளையாட்டு

அமெரிக்காவில் குடியேற தீர்மானித்திருக்கும் இலங்கை வீரர்.

தடை செய்யப்பட்ட 3 இலங்கை கிரிக்கெட் வீரர்களில் ஒருவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் குடியேற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் விதிகளை மீறி மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோருக்கு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒரு வருடத்திற்கும், உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஆறு மாதங்களுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த மூவரில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் குடியேற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் பெரேரா மற்றும் உடானாவைத் தொடர்ந்து, மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் வரவிருக்கும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு, வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, மூத்த வீரர்கள் என்ற அடிப்படையில் அணி தேர்வில் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பாடது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button