உலகம்

அமெரிக்காவில் விமான விபத்து; 9 பேர் பலி

அமெரிக்காவின் தென் டகொட்டாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

Pilatus PC-12 என்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

12 பேருடன் பயணித்த குறித்த விமானத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button