உலகம்

அமெரிக்காவுக்கு பகிரங்க சவால் விடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.

அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது.

வடகொரியா இவ்வாறு இரண்டு சிறிய ரக ஏவுகணைகளை இன்று கடலில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் அதிகபட்ச வேகத்தில் 380 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து, 97 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கிழக்கு கடல் பகுதியான ஜப்பான் கடலில் விழுந்துள்ளது என தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கொரியத் தீபகற்பத்தில் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக வடகொரியா இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏவுகணை பரிசோதனையை நடத்தியிருந்தது.

இதனால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இதனிடையே, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவே, இந்த அணுவாயுத விவகாரங்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், அவர் ஒரு கொடிய விஷம் என்றும் வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ நேற்று தெரிவித்திருந்தார். 

இதற்கு முன்னர் வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டபோது, புதிய ஏவுகணை சோதனைகள், கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download