உலகம்

அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை – வடகொரியா திட்டவட்டம்.

அமெரிக்காவுடன் இனிமேல் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா – வடகொரியத் தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த அறிவிப்பு குறித்து  வடகொரியா பதிலளித்துள்ளது.

எங்களுக்கு அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தை நடத்த எந்த ஆர்வமும் இல்லை என்றும் இதனால் எங்களுக்கு அமெரிக்காவிடம் திரும்ப ஏதும் கிடைக்கப்போவதில்லை எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த பெப்ரவரியில், வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஆகியோருடைக்கு இடையே இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது.

இருப்பினும் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download