செய்திகள்

அமெரிக்கா – இலங்கை உறவுகள் தொடர்பில், கொழும்பு அமெரிக்கா தூதரகத்தின் அறிக்கை

அமெரிக்கா – இலங்கை உறவு கள் தொடர் பில் கொழும்பு அமெரிக் தூதரகம் வியாழக்கிழமை 21.06.2018 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்கா விலகியுள்ளதாக இராஜாங்க செயலாளர் பொம்பேயோ அறிவித்துள்ளார்.

அனைத்து இலங்கையர் களுக்குமான நல்லிணக்கம் மற்றும் நீடித்த சமாதானத்தின் காரணிகளை முன்னெடுப்பதன் நிமித்தம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தொடர்ச்சியான மற்றும் உறுதியான உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற உதவுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் நாம் முற்றிலும் இணைந்திருப்போம் என்ற அமெரிக்கா அரசாங்கத்தின் உத்தரவாதத்தை தொடர்விப்பதற்காக அமெரிக்கா தூதுவர் அதுல் கெஷாப் இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்தார்.

2015 ஆம் ஆண்டில் 30󠇨ஃ1 ஆம் இலக்க தீர்மானம் மற்றும் 2017 ஆம் ஆண்டில் 34ஃ1 ஆம் இலக்க தீர்மானம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இரு தீர் மானங்களுக்கு அமெரிக்காவு டன் இணைந்து இலங்கையும் இணை அணுசரனை வழங்கியிருந்தது. இந்த தீர்மானங்களில் தளிவாக எடுத்துரைக்கப்பட்டு மீள உறுதிசெய்யப்பட்டுள்ளதை போன்று இந்த முக்கிய உறுதிமொழிகளை நிறைவு செயற்வதற்கு இலங்கைக்கு அமெரிக்கா தமது ஆதரவினை தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

இந்த சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தொடர் ச்சியான முன்னேற்றமானது எமது இருதரப்பு உறவுகளிலான வளர்ச்சியை எளிதாக்கும் என்பதுடன்இ உலகம் முழுவதிலுமான நண்பர்கள் மற்றும் பங்காளர் களுடன் இணைந்து செயற்படுவதற்கான இலங்கையின் ஆற்றலையும் மேம்படுத்தும்.

இலங்கையின் முன்னேற்றங்களை நாம் உன்னிப்பாக அவதானிப்போம் என்பதுடன், எமது அண்மைய உறவு களை பிரதிபலிக்கும் நட்புறவு மனநிலையுடன் இப்போதைக்கும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். ஜெனீவா தீர்மானத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவை தொடர்பில் இலங்கை மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் அமெரிக்காவும் ஆதரவளிக்கும் என்பதுடன்இ எமது இருதரப்பு பங்காண்மையை விஸ்தாபிக்கவும் செயற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button