உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா எல்லை மூடல்

அமெரிக்காவின், கனடா மற்றும் மெக்ஸிக்கோவுடனான தரைமார்க்க எல்லைகள், அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது, அடுத்தமாதம் 21 ஆம் திகதி வரையாவது இந்த எல்லைகள் மூடப்பட்டிருக்குமென அமெரிக்க உள்நாட்டலுவல்கள் செயலாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்றையதினம் நிறைவுக்கு வரவிருந்த எல்லைக்கட்டுப்பாடுகளை நீடிப்பதாக கனடா அறிவித்திருந்த நிலையில், அமெரிக்காவின் 30 நாள் எல்லை மூடல் கட்டுப்பாடுகள் வௌியாகியுள்ளன. பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில், கனடா மற்றும் மெக்ஸிக்கோவுடன் கலந்துரையாடுவதற்கான செயற்குழுக்கூட்டத்தை கடந்த வாரம் அமெரிக்கா நடத்தியிருந்தது. அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை இந்தக்கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button