உலகம்செய்திகள்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் எகிப்துக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் எகிப்துக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த வாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையில் எட்டப்பட்ட யுத்த நிறுத்தத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பிராந்திய விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று அவர் எகிப்தை சென்றடைந்துள்ளார்.

விஜயத்தின் முதலாவது நாளில் அமெரிக்க இராஜாங்க செயலாளர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்தார். காஸாவை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளதாக இதன்போது அமெரிக்க இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் இதன்மூலம் பயன்பெறாமல் இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா அல் சிசியை, அன்டனி பிளிங்கன் சந்திக்கவுள்ளதுடன், ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 11 நாட்கள் வரை தொடர்ந்த இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான மோதலில் 66 சிறுவர்கள் உள்ளிட்ட 248 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com