உலகம்

அமெரிக்க இராணுவத்தின் மற்றுமோர் அதிரடி அறிவிப்பு.!

பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க தவறவிட்டதாக கூறி பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 300 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்த அமெரிக்க இராணுவம் இறுதி முடிவு எடுத்துள்ளது.

பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச இராணுவ பாடசாலையில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க இராணுவம் வழங்கும் 300 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மிகச்சமீபத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

26 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button