செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் இலங்கை பிரஜை

கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி மேற்படி ஆணைக்குழுவில் 22 உறுப்பினர்கள் ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டனர். அதில் கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியலும் உள்ளடங்குகின்றார்

கலாநிதி கேப்ரியல் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் அவர், பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com