செய்திகள்

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு சிவில் சமூக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
அரசியல் பொருளாதார சவால்கள் குறித்து ஆராய்வதற்காகவும் ஜனநாயக இலங்கைக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்காகவும் நான் அவர்களை சந்தித்தேன் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இந்த வாரம் நான் யாழ்ப்பாணம் செல்கின்றேன்-அந்த பகுதிக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்தும் ஆதரவளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காகவும், வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனத்தை செலுத்தும் மாற்றத்தை ஏற்படுத்த முயல்பவர்களுடன் பேசுவதற்காகவும்,ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய ஆட்சி முறை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் வெளிப்படுத்துவதற்காகவும்.
– அமெரிக்க தூதுவர்

Related Articles

Back to top button