உலகம்

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் வரி நீக்கம்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சோயா மற்றும் இறைச்சிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மேலதிக வரியை நீக்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

சீன நிதியமைச்சினால் இதற்கான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து , இத்தகைய பொருட்களை சீன நிறுவனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யத் ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் நிலவிவரும் வர்த்தகப்போரினால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் இறைச்சிப் பொருட்கள் மீதான வரியை சீனா மூன்று முறை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button