செய்திகள்

அமைச்சர் சரத் வீரசேகர உடனடி நடவடிக்கை!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், உடனடி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சபையில் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, குறித்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

சிறுமியின் வீட்டுக்கு சென்றும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button