அரசியல்செய்திகள்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ..?

நீதி,மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடபட வுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செலவுகளை கட்டுப்படுத்தல், கட்டுப்பணத்தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட திருத்தங்களை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்யும் நடைமுறைகளிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது சுமார் 70 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button