அரசியல்செய்திகள்

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது…

விளக்கமறியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று முற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கையை பரிசீலித்த நீதவான், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் அவரை விடுவிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சரிடம் பிணை குறித்த ஆவணங்களில் கையொப்பம் பெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ள பிரதம நீதவான், அவரின் கடவுச்சீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

Related Articles

Back to top button
image download