அரசியல்

மீண்டும் பொறுப்பேற்ற முஸ்லீம் அமைச்சர்கள்

அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைச்சர்கள் தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளைப் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.

அமைச்சர் ரவுஃப் ஹக்கீமும் இன்று மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். 

எச்.எம்.எம்.ஹரீஷ், அலி சாஹிர் மௌலானா மற்றும் பைசல் காசிம் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவியேற்கவில்லை.

இதற்கு மேலதிகமாக பிரதி அமைச்சராக இத்தனை காலமும் பதவி வகித்த புத்திக பத்திரன இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக்கொண்டார் .

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
1. கௌரவ ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்

2. கௌரவ றிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர்

3. கௌரவ அமீர் அலி செய்யத் முஹம்மத் சிஹாப்தீன்- விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

4. கௌரவ அப்துல்லாஹ் மஹ்ரூப்- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்

5. கௌரவ புத்திக பத்திரண- கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சர்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் காரணம் என எதிர்கட்சி குற்றஞ்சுமத்தியிருந்தது .

இதனையடுத்து ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்காகவும் தாம் பதவு துறப்பதாக , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் அமைச்சர்கள் அறிவித்தனர் .

இதனையடுத்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download