மலையகம்

அமைதியாக இருந்த வட்டகொடை இன்று அவல நிலையை சந்தித்துள்ளது. சுப்பையா ராஜசேகரம்

கிட்டத்தட்ட 30 வருடங்களாக எந்தவித பிரச்சினைகளும் வேலை நிறுத்தங்களுமின்றி அமைதியாக இருந்த ஸ்டேசன் வட்டகொடை மேற்பிரிவில் புதிதாக வந்த தோட்ட அதிகாரிகளினால் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய அவல நிலையை தொழிலாளர்கள் எதிர் நோக்குகிறார்கள். இந்த தோட்ட மக்கள் பின்வரும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகிண்டனர்.
1) 7.30க்கு ஒரு நிமிடம் பிந்தினாலும் வேலை இல்லை. பகல் வேளையி ல் 12.30 மலையிலிருந்து வந்து 1.30க்கு மலைக்கு சென்றுவிட வேண்டு ம். ஆனால், 4.30க்கு வீட்டுக்கு போக வேண்டியவர்கள் 5மணிக்கு பிறகே மலையை விட்டு இறங்க வேண்டும்.
2) மாதம் 5நாள் பெண்களுக்கு தரப்பட்ட (மாதவிடாய் காலத்தில்)விடுமு றை நிறுத்தப்படடுள்ளது. 2நாள் வராவிட்டாலும் துரையை அவர்கள் கண்டு துண்டு பெறவேண்டும்.
3) கொழுந்து குறைவான காலத்திலும் 18 கிலோ எடுக்காவிட்டால் அன்றைய பெயர் இல்லை.
4)மலையில் தேநீர் அருந்த 10 நிமிடம் மட்டுமே.
5) தொழிலாளிகளிடம் தரங்கெட்டவார்த்தை பிரயோகம்.
6)கழிவு அறைகள் உட்பட அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன.
7)லயன்கள் மழைக்கு ஒழுகுகின்றன, செப்பனிட வில்லை.
8)பக்கத்து நிரையிலிருப்பவர்களுடன் கதைத்தால் மலையை விட்டு விர ட்டப்படுதல்.
போன்ற முக்கிய விடயங்கள் மட்டுமல்ல, தாங்கள் வைத்து வளர்த்த கருப்பந் தைல மரத்தின் உண்மை விலையை மறைத்து தோட்ட நிர்வாகம் பணத்தை சுருட்டி கொண்டிருக்கிறது. 130 அடி உயரமும் 13-16 அகலமும்உடைய 78மரங்களை தோட்ட நிர்வாகம் விற்றுள்ளது. ஒரு மரத்தின் பெருமதி 4இலட்சம் ஆனால் வெறும் 20 ஆயிரம் மட்டுமே என நிர்வாகம் குறிப்பிடுவதாக தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காலை 7.30லிருந்து மடுவத்தில் இருக்கும் எம்மை எந்த ஒரு நிர்வாகியு கண்டுகொள்ள முன்வரவில்லை என ஆதங்கத்துடன் தோட்டமக்கள் கூறுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button