...
செய்திகள்

அம்பாறையில் மைக்ரோ ரக கைதுப்பாக்கியை விற்க முயன்ற ஒருவர் கைது

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று காலை காரைதீவு விபுலானந்த வித்தியாலய வீதியிலுள்ள சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி விற்கும் ஒருவரின் வீட்டை இராணுவ புலனாய்வு பிரிவு பொலிசார் மற்றும் விசேட அதிரப்படையினருடன் இணைந்து குறித்த வீட்டை முற்றுகையிட்டபோது மைக்கிரோ ரக கைதுப்பாக்கி ஒன்றும் இரண்டு மகசீன்களில் 16 ரவைகளுடன் 44 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஆரையம்பதியிலுள்ள சட்டவிரோத துப்பாகி வியாபாரி ஒருவர் மூலம் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாவுக்கு வாங்கியதாகவும் அதனை 16 இலட்சம் ரூபாவுக்கு விற்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக  விசேட அதிரடிப்படையினரின் ஆரம்பகட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது 

இதில் கைது செய்யப்பட்டவரை  பொலிஸ் விசாணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen