...
செய்திகள்

அம்பாறை- அக்கரைப்பற்று- கருங்கொடித்தீவு- அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில்

 
அறிவு தந்து, ஆற்றல் தந்து அரவணைக்கும் விநாயகரே
ஆறுதலைத் தந்தெம்மை அணைத்தருள வேண்டுமப்பா
சுற்றி வரும் கொடும் பகைகள் எட்டியே விலகிவிட
உற்ற துணையாயிருந்து உரியவற்றைச் செய்திடப்பா
அம்பாறை மாவட்டத்தில் இருந்தாளும் விநாயகரே
அநியாயம் செய்வோரை அடக்கிடவே வேண்டுமப்பா
சுற்றம் உடன் சூழ நிம்மதியாய் வாழ்வதற்கு
ஏற்ற விதி செய்து எமக்குதவி செய்திடப்பா
அக்கரைப் பற்றினிலே அருள் பொழியும் விநாயகரே
அதர்ம நிலையினையே அடியோடு அழித்துவிட வேண்டுமப்பா
மகிழ்வுடனே நாம் வாழ இடையூறு செய்வோரை
வாழ்விழக்கச் செய்தெம் குறைதீரச் செய்திடப்பா
கருங்கொடித்தீவமர்ந்து ஒளி பரப்பும் விநாயகரே
காவலாய் நீயிருந்து காத்தருள வேண்டுமப்பா
நாடிவரும் தொல்லைகளை அண்டாமல் விரட்டிவிட
உடனிருந்து நம்மவர்க்கு உறுதுணையாய் உதவிகளைச் செய்திடப்பா
அழகுமிகு திருக்கோயில் கொண்டமர்ந்த விநாயகரே
துன்பந்தரும் நோய், பகையை ஒழித்திடவே வேண்டுமப்பா
ஆணவம் கொண்டு நம்முரிமைகளைப் பறிப்போரை
தடுமாறச் செய்து தலைகுனியச் செய்திடப்பா
தென்கிழக்குத் திசையிருந்து துணையிருக்கும் விநாயகரே
தொல்லையில்லா நல்வாழ்வையெமக்கருள வேண்டுமப்பா
வல்லவுன் கருணையினால் வளம் பெற்றுநாம் வாழ
உரிய வழியமைத்து உயர்த்திடவே செய்திடப்பா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen