...
செய்திகள்

அம்பாறை- கல்முனை அருள்மிகு சர்வார்த்த சித்தி விநாயகர் திருக்கோயில் 

சர்வமும் நீயென்று நம்பிநிற்கும் எங்களுக்கு 
உள்ளத்தில் உறுதி பெற உன்னருளே தேவையப்பா
காக்கும் கரங்கள் ஐந்தினைக் கொண்ட விநாயகனே
கவலையின்றி நாம் வாழ உன்னருளைத் தந்திடப்பா
கல்முனை நம் நகரில் வீற்றிருக்கும் உன் கருணை 
தளர்வின்றி எங்களுக்கு உயர்வளிக்க தேவையப்பா 
ஒன்று பட்டு உன்னடியார் ஒற்றுமையாக வாழ்வதற்கு 
உன்னருளையென்றும் தளர்வின்றி தந்திடப்பா
துணிவுகுன்றா வாழ்வுக்கு வேண்டுவது உன் துணையே
தெளிவான சிந்தனையைத் தந்தருள வேண்டுமப்பா
தொல்லைகள் நீக்கிவிடும் கருணை மிகு பெருமானே 
வெற்றி முகம் நோக்கிச் செல்ல நல்லறிவைத் தந்திடப்பா
சர்வார்த்த சித்தி விநாயகரென்ற பெயர் கொண்ட பெருமானே 
சங்கடங்கள் நீங்கிடவே உன் பார்வை வேண்டுமப்பா
கல்முனை பெருநகரில் தலை நிமிர்ந்து நாம் வாழ 
வல்லமை தந்து வழித்துணையைத் தந்திடப்பா
கிழக்கிலங்கை தமிழ் மணக்கும் திருவிடத்தில் வீற்றிருக்கும் 
பேரருளே, பெருநிதியே, உன்காப்பு எங்களுக்கு என்றுமே வேண்டுமப்பா 
கலக்கமின்றி நிம்மதியாய் உயர்வு நிலைத்து நாம் வாழ 
ஏற்ற பலமளித்து வளமளித்து வாழ வழி தந்திடப்பா
எழுச்சி பெற்று மகிழ்ச்சியுற எங்களுக்கு அருள் வேண்டும் 
உன் துணையால் எம்வாழ்வில் ஏற்றம் நிலைக்க வேண்டுமப்பா
நம்பியுன் அடிபற்றும் எங்களுக்கு நீயே சரணமப்பா
காத்து, வளமளித்து, கருணை செய்ய, உடனிருக்க வந்திடப்பா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen