அம்பாறை- கல்முனை- சொறிக் கல்முனை, அருள்மிகு தென்பத்திரகாளி அம்மன் திருக்கோயில்
சொறிக் கல்முனை, அருள்மிகு தென்பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

அம்பாறை- கல்முனை- சொறிக் கல்முனை, அருள்மிகு தென்பத்திரகாளி அம்மன் திருக்கோயில்
ஆதரித்து, அரவணைத்து, ஆறுதலைத் தரும் தாயே
அருகிருந்து நலம் தந்து எங்களை நீ காத்திடுவாய்
அச்சமில்லா மனத்தினராய் நாம் என்றும் வாழ்வதற்கு
துணையிருப்பாய் தாயே தென்பத்திரகாளி அம்மாவே
அழகுமிகு திருவுருவைக் கொண்டவளே எம் தாயே
அதர்மத்தை அழித்தொழித்து அரணாக இருந்திடுவாய்
மனவமைதி நாம் பெற்று நிம்மதியாய் வாழ்வதற்கு
துணையிருப்பாய் தாயே தென்பத்திரகாளி அம்மாவே
கிழக்கிலங்கை எழுந்தருளி நம்பிக்கை தருந் தாயே
கிலிகொண்டு அல்லலுறும் அவலநிலை அகற்றிடுவாய்
கலக்கமில்லா மனத்தினராய் நாமென்றும் வாழ்வதற்கு
துணையிருப்பாய் தாயே தென்பத்திரகாளி அம்மாவே
வளங்கொண்ட வயல் நிலத்தை அருகு கொண்டவளே தாயே
வற்றாத நற்கருணை நமக்களிக்க எழுந்தருள்வாய்
வழுவில்லா வாழ்க்கையினை நாமென்றும் வாழ்வதற்கு
துணையிருப்பாய் தாயே தென்பத்திரகாளி அம்மாவே
வனப்புமிகு கோபுரத்தைக் கொண்டுறையும் தாயே
நம் வரலாற்றுப் பெருமையினை உறுதி செய்ய வந்திடுவாய்
மகிழ்வு நிறை வாழ்க்கையினை நாமென்றும் வாழ்வதற்கு
துணையிருப்பாய் தாயே தென்பத்திரகாளி அம்மாவே
சொறிக் கல்முனை நல்லூரில் கோயில் கொண்ட தாயே
சொந்தங்கள் இணைந்து வாழ உதவிடவே அருள்வாய்
தமிழ் முழங்கும் உன் மண்ணில் நிம்மதியாய் வாழ்வதற்கு
துணையிருப்பாய் தாயே தென்பத்திரகாளி அம்மாவே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.