...
செய்திகள்

அம்பாறை- சேனைக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் 

வற்றாத கருணையினை வழங்குகின்ற பெருமானே 
எம்வாழ்வுக்கு ஒளியேற்றி வளப்படுத்த வேண்டுமைய்யா 
வேற்றுமைகளின்றி ஒன்றுபட்டு நாம் வாழ 
உரிய மனப்பக்குவத்தை வழங்கிடவே வந்திடைய்யா
தென்கிழக்கு இலங்கையிலே கோயில் கொண்ட பெருமானே 
தீங்ககன்ற நல்வாழ்வை தந்தருள வேண்டுமைய்யா 
தொன்மைமிகு தமிழ் நிலத்தில் நம்முரிமையுறுதிபட 
திருமாலின் மருமகனே துணையிருக்க வந்திடைய்யா
அம்பாறை மாவட்டத்தில் அமர்ந்தருளும் பெருமானே 
அச்சமின்றி தலைநிமிர்ந்து வாழ வழி வேண்டுமைய்யா 
தன்மானம் குன்றாது தமிழர் நிலை மேலுயர
தளராத உறுதியினை உறுதி செய்ய வந்திடைய்யா
வயல் சூழ்ந்த வளநிலத்தில் உறைகின்ற பெருமானே 
தளும்பாத நன்நெறியில் வாழ வழி வேண்டுமைய்யா
தொல்லைகளின்றி துணிவுடனே வாழ்வதற்கு 
ஏற்ற காவல்தர விரைந்து நீ வந்திடைய்யா
சேனைக்குடியிருப்பு தொன்மைமிகு திருப்பதியிலுறை பெருமானே 
வேதனைகள் தரும் துன்பம் துடைத்தெறிய வேண்டுமைய்யா
நிம்மதியாயெம்மண்ணில் நாம் துயின்று எழுவதற்கு 
உடனிருந்து துணையிருந்து காவல் செய்ய வந்திடைய்யா
உலகளந்த பேரருளே எங்கள் சித்தி விநாயகப் பெருமானே 
வஞ்சமனங் கொண்டோர் மனம் திருந்த வழி வேண்டுமைய்யா
நிம்மதியாய் இம்மண்ணில் நிரந்தரமாய் வாழ்வதற்கு 
கட்டியணைத்தருள, விரைந்து நீ வந்திடைய்யா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen