...
செய்திகள்

அம்பாறை சொறிக் கல்முனை அருள்மிகு தென்பத்திரகாளி அம்மன் திருக்கோயில் 

கல்முனைத் தமிழ் மண்ணில் கனிவு கொண்ட திருமுகத்தாள்
வல்லமை தந்தெம்மை வழிநடத்த வந்தமர்ந்தாள் 
நல்லவர் உள்ளங்களில் நாளும் அமர்ந்திருப்பாள்
அந்த தென் பத்திரகாளியம்மனைப் போற்றித் தொழுதிடுவோம்
வீரமிகு தமிழர் நெஞ்சில் உறுதி தரும் எங்கள் அன்னை 
ஆளுமை தந்தெம்மை ஆட்டுவிக்க வந்தமர்ந்தாள் 
நம்பியவள் அடிபணிவோர் இல்லங்களில் உறைந்திருப்பாள்
அந்த தென் பத்திரகாளியம்மனைப் போற்றித் தொழுதிடுவோம்
அம்பாறை மாவட்டத்தில் இருந்தருளும் காளியம்மன்
அறங்காக்கும் வலுவுடையாள் எங்கள் நலங்காக்க வந்தமர்ந்தாள் 
துன்பங் களைந்திடுவாள் துயர்போக்கி அருளிடுவாள் 
அந்த தென் பத்திரகாளியம்மனைப் போற்றித் தொழுதிடுவோம்
சொறிக் கல்முனை கிராமத்திலே கோயில் கொண்டு உறைகின்ற காளியம்மன் 
கருணை செய்து காவல் செய்யும் கடமை செய்ய வந்துவிட்டாள் 
நாடிச் சென்று தொழுது நிற்போர் நலன் பேணச் செய்திடுவாள் 
அந்த தென் பத்திரகாளியம்மனைப் போற்றித் தொழுதிடுவோம்
வயல் சூழ்ந்த வள நிலத்தில் வீற்றிருந்து அருளுகின்ற காளியம்மன் 
நேர்மைமிகு நெறியில் நம்மை அழைத்துச் செல்ல வந்துவிட்டாள் 
கூடிவரும் நன்மைகளை நாமடையச் செய்திடுவாள் 
அந்த தென் பத்திரகாளியம்மனைப் போற்றித் தொழுதிடுவோம்
தென் திசை நோக்கியமர்ந்து தூய சிந்தனை யருளுகின்ற காளியம்மன் 
தெளிவான மனநிலையும், அச்சமில்லா சூழ்நிலையும் தந்தருள வந்தமர்ந்தாள் 
வலுவான எதிர்காலம் நம்மினத்தோர் அடைந்து விட அருளிடுவாள் 
அந்த தென் பத்திரகாளியம்மனைப் போற்றித் தொழுதிடுவோம்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen