செய்திகள்

அம்பாறை-தாய் மற்றும் மகன் படுகொலை ,சந்தேக நபரை தேடும் பொலிஸ் ..

அம்பாறை மாவட்டத்தில் தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராலந்த கிராமத்தில் தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார்.

நேற்று (31) அதிகாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பெண் வேறொரு நபருடன் குறித்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று உயிரிழந்த பெண் அவரின் தாயாருக்கு தொலைப்பேசியில் தொடர்ந்து கொண்டு குறித்த நபர் தன்னை சித்தரவதை செய்தவதாகவும் இதன் காரணமாக நாளைய தினம் மகனை பாடசாலைக்கு அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த தாயார் மீண்டும் குறித்த தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்த போதும் எவரும் பதிலளிக்க வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை அயல் வீட்டு பெண் ஒருவர் மகனை ஏன் பாடசாலைக்கு அனுப்ப வில்லை என கேட்பதற்காக குறித்த வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பின் வாசல் வழியில் பார்வையிட்டதில் இரத்தக் வௌ்ளத்தில் தாய் மற்றும் மகன் இருப்பதை அவதானித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தமன பொலிஸார் சடலங்களை மீட்டு கொலை சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த கொலையாளியை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்றி தமிழ் தெரண

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com