...
செய்திகள்

அம்பாறை நகர்- அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில் 

பாரெங்கும் அருள்பரப்பி ஏற்றிடைய்யா கருணையொளி
துணையிருந்து நலமளிக்கும் சிவனாரின் திருமகனே
தீமைகளை ஓட்டிவிட்டு ஒளிரச்செய்வாய் நன்மைகளை 
அம்பாறை நகரமர்ந்த மாணிக்கப் பிள்ளையாரே
வளம் நிறைந்த நகரத்தின் மத்தியிலே குடிகொண்டாய்
வளமான வாழ்வளித்து ஆறுதலை அளிப்போனே 
தலை தாழா வாழ்வுக்கு உன் துணையே வேண்டுமைய்யா 
மனமுருகி வேண்டுகின்றோம் மாணிக்கப் பிள்ளையாரே
தென்கிழக்கு இலங்கையிலே திடமாக அமர்ந்தவனே
வலுவான துணையிருந்து ஏற்ற வழிகாட்டிடைய்யா
துன்பநிலை போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு
வேழமுகம் கொண்டவனே மாணிக்கப் பிள்ளையாரே
சோர்ந்து நிற்போர் மனங்களிலே வலுவூட்டும் பலம் நீயே 
பயங்கொண்டு தயங்கி நிற்போர் துயர்போக்கி அருள்வோனே
அண்டிவரும் துன்பநிலை அகற்றி வழி காட்டிடைய்யா
வலிமை தந்து வாழ்வளிக்கும் மாணிக்கப் பிள்ளையாரே
மகிழ்ச்சியெங்கும் பெருகிடவும் உலகத்தோர் உயர்ந்திடவும்
உரிமைகள் வலுப்பெறவும் நமது நிலை மேம்படவும்
பார்வதியின் புத்திரனே அடிபணிந்து வணங்குகின்றோம்
தளராத மனம் தந்து ஆட்கொள்வாய் மாணிக்கப் பிள்ளையாரே
சஞ்சலங்கள் போக்கி நலம் அருளும் பிள்ளையாரே
ஒன்றுபட்டு நாம் வாழும் உயர் நிலையைத் தாருமைய்யா 
ஆதிசிவன் மூத்தமகன் அருகினிலே உடனிருந்து 
உரிமையுடன் வாழ வழி செய்வாய் மாணிக்கப் பிள்ளையாரே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen