...
செய்திகள்

அம்பாறை பாண்டிருப்பு அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோயில் 

தென்கிழக்குத் திசையினிலே கோயில் கொண்ட அம்மன் 
தெளிவான நல்வாழ்வை எமக்களிக்க வருவாள்
தொல்லைகள் துடைத் தெறியும் தெய்வமகள் தேவி
அனுதினமும் உடனிருந்து அருளினையே தருவாள்
கல்முனை நகரின் எல்லை இருந்தருளும் அம்மன் 
கவலைகள் துடைத்தெறிந்து மனவலிமை தருவாள்
பொல்லாதோர் கொடுமைகளை அடக்கவரும் தேவி
நிலையான நிம்மதியை தவறாது தருவாள்
கடலலையின் ஓசையிலே கலந்து வரும் அம்மன் 
காலத்தால் நிலைத்து நிற்கும் நன்மைகளைத் தருவாள்
நம்பித்தொழும் அடியவர்கள் நலன் காக்கும் தேவி
நம்முடனே உடனிருந்து நல்லருளைத் தருவாள்
புரட்டாதி மாதமதில் திருவிழா காணும் அம்மன் 
பூரண வலிமை தந்து ஆளுமையும் தருவாள்
ஆணவத்தை அடக்கி துணையருளும் தேவி
உரிமைகளை எமதாக்கி வாழவழி தருவாள்
பாண்டிருப்பு நற்பதியில் வீற்றிருக்கும் அம்மன் 
பாதகங்கள் செய்வோரை வேரறுத்தே விடுவாள்
பதினெட்டு நாட்கள் விழா காணும் தேவி
பரிதவிக்கும் நிலையினின்றும் மீட்சி பெற்றே தருவாள்
தீமிதிப்பு கண்டுவரும் திரௌபதை அம்மன் 
துன்பங்கள், துரோகங்களைத் தீயிட்டே அழிப்பாள்
காலத்தால் அழியாத காவியத்தின் தலைவி
நம் தமிழர் வாழ்வுக்கு ஒளியேற்றி வைப்பாள்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen