...
செய்திகள்

அம்பாறை- பெரிய நீலாவணை அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோயில் 

தென்கிழக்குத் திசையிருந்து காவல் செய்யும் மாயவனே
தெளிவில்லா நிலையகற்றி நேர் வழியைக் காட்டிடுவாய்
தொன்மைமிகு தமிழ் மண்ணில் இருந்தருளும் திருமாலே
தொல்லையின்றி நாம் வாழ உன்னருளைத் தந்திடுவாய்
அம்பாறை மாவட்டத்தில் அமர்ந்தருளும் மாயவனே
தெளிவான எதிர்காலம் உறுதி செய்து விட்டிடுவாய்
வளங்கொண்ட நம் நிலத்தில் கோயில் கொண்ட திருமாலே
வழிதவறா நெறியெமக்கு காட்டி அருளிடுவாய்
பெரிய நீலாவணை புனித இடம் உறைந்தருளும் மாயவனே
பொறுமைமிகு வாழ்வுக்கெம்மை வழிப்படுத்தி விட்டிடுவாய்
தமிழ் முழங்கும் திருவிடத்தில் குடி கொண்ட திருமாலே
தரணியிலே நம் நிலைமை உயர்ந்திடவே செய்திடுவாய்
மருதநிலச் சூழலிலே அருள் பொழியும் மாயவனே
மனவெழுச்சி தந்தெம்மை மகிழ்வடையச் செய்திடுவாய்
மாநிலத்தில் நம்முரிமை வலுவடையத் திருமாலே
வழிப்படுத்தி நெறியமைத்து வந்தெமக்கு அருளிடுவாய்
வயல் சூழ்ந்த வளநிலத்திலிருந்து வரமளிக்கும் மாயவனே 
நம்முரிமை நாமடைய உறுதி செய்து விட்டிடுவாய்
நம்பிக்கை கொண்டுன்னடி பற்றுகின்றோம் திருமாலே
தளர்வில்லா நிம்மதியை நித்தமெமக்குத் தந்திடுவாய்
காக்கும் கடவுளென்ற பெருமை கொண்ட மாயவனே
மருங்கிருக்கும் அன்னையரின் அன்பையெமக் கருளிடுவாய்
வளங்கொண்ட கிழக்கிலங்கை வந்தமர்ந்த திருமாலே
வற்றாத வளங்களையே நாமடைய அருளிடுவாய்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen