அரங்கத்தை அதிரவைத்த பாரம்மரிய கலைகள்…..கந்தப்பளையில்
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கந்தப்பளை “அகரம்” அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு 01.10.2017 அன்று மிகவும் விமர்சையாக கந்தப்பளை நகரில் இடம்பெற்றது . “. தமிழர்களின்(மலையகத்தின்) பாரம்பரிய கலைகளை சிறார்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை மகிழ்வித்த இந்த பாரம்பரிய கலைகளை தொடர்ந்து பாதுகாத்து வரும் லிந்துல_சென்றெகுலர்ஸ் தோட்ட இளைஞர்களால் அன்றைய தினம் அரங்கேற்றப்பட்ட தப்பிசை, காவடி,கோலாட்டம் என்பன அரங்கையே அதிர வைத்தது! என்பதை அங்கு சூழ இருந்த பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர் .அரங்கில் அமர்ந்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எழுந்து நின்று ஆடி மகிழ்ந்தனர். பாரம்பரிய கலைகளை பேணி பாதுத்துவரும் இந்த கலைஞர்கள் உண்மையில் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.விழாவை ஏற்பாடு செயத அகரம் அமைப்பினர் பாராட்டப்பட வேண்டியயவர்கள்
அ.ரெ.அருட்செல்வம்
செய்தியாளர்