கல்வி

அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி..


ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் கட்டுரைப் போட்டியொன்றினை நடாத்துகின்றது.

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்கள்

தரம் 06 முதல் தரம் 09 வரை (கனிஷ்டப் பிரிவு)

நான் எனது தாய்மொழியை நேசிப்பதுடன் பிறமொழிகளிற்கும் மதிப்பளிக்கின்றேன்.

நட்பின் அடிப்படை மொழியாகும்.

மொழியே ஒற்றுமையின் பலம்.

தரம் 10 முதல் 13 வரை ( சிரேஷ்டப் பிரிவு)
மொழி கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும்.
பெண்களை வலுவூட்டுதலில் மொழியின் வகிபங்கு.
தேசிய ஒற்றுமையை வளர்ப்பதன் முன்னோடியான சக்தி மொழியாகும்.
ஆக்கபூர்வமான சமூகமொன்றை உருவாக்குவதில் மொழியின் முக்கியத்துவம்.
போட்டிக்கான விதிமுறைகள்
கட்டுரைப் போட்டிக்கான ஆக்கங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் முன்வைக்கலாம்.
போட்டி கனிஷ்டப் பிரிவு (6- 9 தரங்கள்) மற்றும் சிரேஷ்டப் பிரிவு (10 –13 தரங்கள்) என இரு வயதுப் பிரிவுகளின் கீழ் நடாத்தப்படுவதுடன் இலங்கையின் சகல பாடசாலை மாணவர்களும் பங்குபற்றலாம்.

சொற்களின் எண்ணிக்கை : கனிஷடப் பிரிவு 500 சொற்கள் சிரேஷ்டப் பிரிவு 1500 சொற்கள்.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியாகும். முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும். நடுவர்களின் முடிவு இறுதி முடிவாகக் கொள்ளப்படும்.
வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் தபால் மூலம், மின்னஞ்சல் மூலம், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் அறிவிக்கப்படும்.
போட்டிக்கான உரிய தகைமைகளை கொண்டிராத விண்ணப்பப்படிவங்கள் முன்னறிவித்தலின்றி நிராகரிக்கப்படும். தற்போது நிலவும் கோவிட் 19 தொற்று நிலைமைக் காரணமாக உங்களது விண்ணப்பப்படிவங்கள் மற்றும் கட்டுரை ஆக்கங்களை மின்னஞ்சலின் மூலம் அல்லது பதிவுத் தபாலின் மூலம் அனுப்பிவைக்கலாம் அல்லது நேரடியாக கையளிக்கவும் முடியும்.
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முகவரி :
தலைவர்,
அரசகரும மொழிகள் ஆணைக்குழு, “ஜனஜயசிட்டி” வர்த்தக வளாகம், 9 ஆம் மாடி, நாவல வீதி
இராஜகிரிய

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்

யஸ்மினி:
077 217 0285

Related Articles

Back to top button