அரசியல்செய்திகள்

அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தயார்- சம்மந்தன்.

கோட்டாபய ராஷபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்கு தாம் எப்போதும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்கு தாம் எப்போதும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக இரா.சம்மந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பாகதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் நீதியானதும் சுதந்திரமானதுமாக வாழ்வதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button