அரசியல்செய்திகள்

அரசாங்கத்தின் நிறைவேற்றதிகாரிகளுக்கு 15 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு.?

அரசாங்கத்தின் நிறைவேற்றதிகாரிகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் 15 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கான சுற்றுநிரூபம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தமக்கு விசேட கொடுப்பனவை வழங்குமாறு கடந்த ஆட்சி காலத்தில், அரச நிறைவேற்றதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்பிரகாரம் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையினால் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கியது.

இந்த கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button