அரசியல்

அரசாங்கமும் எதிர்கட்சியும் பொறுப்பு கூறலில் இருந்து விலகியுள்ளன – கர்தினால் ஆண்டகை குற்றச்சாட்டு .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கமும் எதிர்கட்சியும் பொறுப்பு கூறலில் இருந்து விலகியுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சாட்டினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு தற்போது மறந்து போயுள்ளதாகவும் , முதலில் செய்ய வேண்டியதை செய்து விட்டு, பிறகு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் நீதி மாத்திரமே தேவைப்படுவதாகவும் நட்ட ஈடு அல்ல எனவும் தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தும் அதனை கண்டுகொள்ளாமல் செயற்பட்டவர்களுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அரசாங்கமும் எதிர்கட்சியும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் பொறுப்பு கூறலில் இருந்து விலகியுள்ளதாகவும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சுமத்தினார்.

தான் எந்தவொரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும்,சிலர் தன்னை அரசியலுடன் தொடர்பு படுத்துவதாகவும் மக்களுக்காகவே தான் முன்னின்று செயற்படுவதாகவும் போராயர் இதன்போது குறிப்பிட்டார்.

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான அறிக்கை கூட இன்று வரையில் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் பேராயர் தெரித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்வும் இதுவரையில் எட்டப்படாமல் , 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே எந்தவொரு அரசியல் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளரும் தன்னை பார்க்க வரவேண்டாம் எனவும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

Related Articles

Back to top button