அரசியல்

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் நிறைவு

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அரசியல் அமைப்பு சபையின் ஏனைய பிரதிநிதிகளான, அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டீ.ஜே செனவிரத்ன, விஜித்த ஹேரத் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மூவரின் பதவிக் காலம் நிறைவடைவதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தாவெல குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசியல் அமைப்பு சபையின் பிரதிநிதிகளான பிரதமர், சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் பிரதிநிதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட மஹிந்த சமரசிங்க நீடிப்பார் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button