அரசியல்செய்திகள்

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது..

அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை
கூடவுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தமூடாக உருவாக்கப்பட்ட 10 பேரைக் கொண்ட அரசியலமைப்பு சபையில், சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலவைர் ஆகியோர் சபைக்கு நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துள்ளதால், அரசியலமைப்புப் பேரவையின் நாளைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசியலமைப்பு பேரவையின் நாளைய கூட்டம் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியினால் எதிர்க்கட்சித் தலைவராக பெயரிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவிற்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடாளுமன்றம் கூடி உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கவில்லை என்பதே அதற்கான காரணமாகும் .

இதற்கமைய, எதிர்க்கட்சியின் தலைவரின் பங்குபற்றுதல் இன்றியே அரசியலமைப்புப் பேரவை நாளை கூடவுள்ளது.

இதனைத்தவிர, நாளை கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவையில் கலந்துகொள்ளுமாறு, இதற்கு முன்னர் அரசியலமைப்புப் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download