சினிமா

அரசியலில் இருந்து பின்வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்!

எதிர்வரும் 31ம் திகதி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய ரஜினிகாந்த், அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார்.

தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினிகாந்த் இன்று (29) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் ஊடாக ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

”கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கட்சி ஆரம்பித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக மாத்திரம் பிரசாரம் செய்ய முடியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

120 பேரை கொண்ட அண்ணத்த படக்குழுவில் கூட கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில்,தனக்கு 3 நாட்கள் வைத்தியசாலையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர்; சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை அருந்தும் தனக்கு, கொரோனா காலத்தில் மக்கள் மத்திக்கு சென்று பிரசாரம் செய்வது கடினமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் அரசியலுக்கு வந்ததன் பின்னர், தனது உடல் நிலை பாதிக்கப்பட்டால், தன்னை நம்பி வரும் பலர், பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் தான் அரசியலுக்கு வர முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button