செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை.

சிக்கல் நிலமை ஏற்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட  07 அரசியல் கட்சிகள் , எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தங்களின் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.


குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றைய தினம் அழைத்து இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சில கட்சிகளின் உரித்துரிமையை தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளமை, ஒரு கட்சியின் உரித்துக்காக சில தரப்புகள் முன்வருகின்றமை, ஒரு கட்சியின் சார்பில் பல செயலாளர்கள் முன்வந்துள்ளமை உள்ளிட்ட பல  சிக்கல்கள் குறித்த கட்சிகளிடம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், லிபரல் கட்சி, ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 07 கட்சிகள் இவ்வாறான சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.


இலங்கையில் 70 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்  காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button