அரசியல்செய்திகள்

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் திங்களன்று விசேட சந்திப்பு.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் எதிர்வரும் புதன்கிழமை  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஏழாம் திகதி இடம்பெறவுள்ள வேட்பு மனு தாக்கல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவுறுத்தப்படவுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள அரசியல் கட்சி பிரதிநிதகள், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button
image download