சமூகம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக கொள்ளுபிட்டியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்துள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி காலி முகத்திடலுக்கு அருகில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ள சில பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர் ஒருவரை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button