அரசியல்

அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்கும் – பிரதமர்.

அரசியல் பழிவாங்கல்களும், இனவாதமும் இல்லாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், திகன சம்பவத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கட்சியின் முடிவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டமைக்கு கூடியிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இதற்கு முன்னர் குறித்த விடயங்களுக்கான நட்டஈட்டை வழங்க முடியாமல் போனமைக்கு தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிக்கமைய இந்த நட்டஈட்டு தொகை வழங்கப்படுவதாகவும், ரங்கே பண்டார அரசியல் ரீதியான பழிவாங்களுக்கு உள்ளாகியுள்ளதால் அவர் கலக்கமடைந்து காணப்படுவதாகவும் கூறினார்.

ஒரு சிலர் அரசியல் பழிவாங்கல்களுக்கும் மேலும் சிலர் இனவாதத்திற்கு இறையாகியுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

நாடு முன்னேற வேண்டுமாயின் ஒழுக்கமுள்ள கொள்கைகள் அவசியம் என தெரிவித்த பிரதமர், அவ்வாறான நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது எனவும், அதற்கு இனவாத பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்க கூடாது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button