மலையகம்

அரசியல் விஞ்ஞான துறையில் இலவச வெளிவாரி பட்டப்படிப்பு

ஈரான் நாட்டின் அனுசரணையோடு அரசியல் விஞ்ஞான துறையில் (அரசறிவியல் ) முற்றிலும் இலவசமாக பதுளையில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான ஓர் அறிய வாய்ப்பு!. என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன் அடிப்படியில் இப் பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புபவர்கள் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதம் ,தமிழ் மொழி உள்ளிட்ட 6 பாடங்களிலும் , க .பொ .த உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும், சித்தியடைந்திருத்தல் வேண்டும்.இதற்கான விளக்கக் கூட்டம் கீழ் கண்ட திகதியில் நடைபெறும் எனவும் நமது மாணவ ,மாணவிகள் மட்டுமன்றி ஆசிரியர்கள் ,அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றுபவர்கள் உள்ளிட்ட ஏனையோரும் இவ் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு வயதெல்லை கிடையாது எனவும் .சம்பந்தப்பட்ட அனைவரும் இவ்வறிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 08.04.2018 ( ஞாயிற்றுக்கிழமை ),பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையின் பிரதான மண்டபதுக்கு காலை 10.00 மணிக்கு வருமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மேற் குறிப்பிட்ட பட்டப்படிப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள 0773516116 , 0779135793 , 055 – 2231526 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தலாம்.

செய்தியாளர் .யது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button